2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்தானது. சென்னை அப்போலோ மருத்துவமனையில், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்.திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி இறந்த மறுநாளிலேயே காத்தவராயனும் காலமாகி உள்ளார். கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழந்ததால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்துள்ளது.

Related Stories: