வங்கியில் அதிகாரி வேலை வாங்கி தருவதாக 13 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்த பிரதீப்குமார் (19) என்பவர், முதல்வர் தனிப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை பெருமாள் பேட்டையை ேசர்ந்த ராஜ்பரத் (35) என்பவர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இளநிலை அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக எனது நண்பர்கள் உட்பட 3 பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து வேப்ேபரி போலீசார் விசாரணை நடத்தியபோது, ராஜ்பரத் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் மீது ஐபிசி 406, 420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். „ வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த இன்ஜினியர் யூவராஜ் (24), அதே பகுதியில் வீடு கட்டும் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கழற்றி வைத்திருந்த உடையில் இருந்து 12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், அருகில் உள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

„ வேளச்சேரி, சாந்தி தெருவை சேர்ந்த மின்வாரிய ஊழியர் பாண்டுரங்கன் (42), நேற்று வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் சிவன் கோயில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். „ சைதாப்பேட்டை விஜிபி சாலையை ேசர்ந்த தொழிலாளி விஜயகுமார் (60), நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த பைக் மோதி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நிஷாந்தன் (22) என்பவரை கைது செய்தனர்.  „ கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா நகர் 2வது தெருவை சேர்ந்த விஜயலட்சுமி (58), வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 2 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

Related Stories: