போலீஸ் தடையை மீறி போராட்டம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது...TDP தொண்டர்கள் கொந்தளிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடு இன்று விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்தார். இதனை அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங். தொண்டர்கள்  சந்திரபாபு நாயுடு பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  சந்திரபாபு நாயுடு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருந்தார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுக்கு போட்டியாக விமான நிலையம் முன்பு தெலுங்கு தேசம் கட்சியினரும் கூடியுள்ளதால் பதற்றம் நிலவியது. இதனால், போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில், போலீஸ்  தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்,  அப்பகுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: