கேஸ் சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு: புதுச்சேரி மகளிர் காங்கிரசினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

புதுச்சேரி: சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் காங்கிரசினர் நூதன போராட்டம் நடத்தியனர். பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலையை கடந்த 12-ம் தேதி 147 உயர்த்தியது. கடந்த இரண்டு மாதங்களாக  இதன் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 734 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் விலையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயக்கு விற்கப்படுகிறது. இது, மக்களுக்கு  அதிர்ச்சி அளித்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எல்பிஜியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது உண்மையல்ல. இந்த மாதம் சர்வதேச சந்தை காரணமாக இது உயர்த்தப்பட்டது. இருப்பினும், அடுத்த மாதம் விலைகள் குறையக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.குளிர்காலத்தில், எல்பிஜி  நுகர்வு அதிகரிக்கிறது. இது துறைக்கு ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது இந்த மாதம், விலை அதிகரித்துள்ளது, அடுத்த மாதம் அது குறையும் என்று கூறினார்.

இந்நிலையில், மத்திய பாஜக அரசின் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணியினர் புதுச்சேரி காமராஜர் சிலை முன், சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வு செய்த பாஜக அரசாங்கத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர். போராட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: