தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு டிஜிபி, 2 பேருக்கு ஏடிஜிபி-யாக பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு டிஜிபி மற்றும் 2 பேருக்கு ஏடிஜிபி-யாக  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் அரோரா டிஜிபி ஆகவும் , சந்தீப் மிட்டல் மற்றும் பாலநாகதேவி ஆகியோர் ஏடிஜிபி ஆகவும் தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

Advertising
Advertising

மத்திய அரசு அனுமதி

தமிழக காவல் துறையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஐபிஎஸ் பணியிடங்களை நிறைவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில அரசு முறைப்படி அனுமதி பெறவேண்டும். அதன் பின்பு தமிழக அரசின் காவல்துறை மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர் பங்கேற்கும் பேனல் கமிட்டி கூட்டத்திலும் இதற்கான அனுமதி பெற்ற பின்னரே பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறையிடம் அனுமதி கோரியது.

அதன்பேரில் மத்திய உள்துறை கடந்த 14ம் தேதி காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போது தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3 டிஜிபி, 3 ஏடிஜிபி, 9 ஐஜி மற்றும் 14 டிஐஜிக்களின் காலியிடங்களை நிரப்புவதோடு, 14 பேருக்கு டிஐஜி பதவி உயர்வுக்கான செலக்சன் கிரேடு பதவி உயர்வும் வழங்க மத்திய உள்துறை அனுமதி வழங்கியது.இதன் அடிப்படையில் தமிழக காவல்துறையின் பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டம் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகர்ராவ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பதவி உயர்வு வழங்குவதற்கான அதிகாரிகள் பட்டியல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

3 பேருக்கு பதவி உயர்வு

அதன் அடிப்படையில் தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு டிஜிபி மற்றும் 2 பேருக்கு ஏடிஜிபி-யாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியான சந்தீப் மிட்டல், மத்திய அரசு பணியாக, டில்லியில், தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் துறை கல்வி மையத்தின், இயக்குனராக பணியாற்றி வருகிறார்.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், காவல் துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ஐ.ஜி.,யாக, பாலநாகதேவி பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, கூடுதல் டி.ஜி.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏடிஜிபிக்களாக உள்ள சஞ்சய் அரோரா (சிஐஎஸ்எப்)ருக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: