நிலக்கோட்டை அருகே முருகத்தூரான்பட்டியில் விபத்துக்களை தடுக்க தேவை வேகத்தடை: பொதுமக்கள் வலியுறுத்தல்

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை அருகே வேகத்தடை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே முருகத்தூரான்பட்டியில் பிரசித்த பெற்ற பழமை வாய்ந்த செபஸ்தியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கிருந்து மேலும் இதே இடத்திலிருந்து இடதுபுறம் சிங்கம்பட்டி, கட்டக்கூத்தன்பட்டி, ஆவாரம்பட்டி போன்ற 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையும், வலதுபுறம் மாலையாகவுண்டன்பட்டி அம்மையநாயக்கனூர் கொடைரோடு மேற்பட்ட கிராமங்களை கடந்து செல்லும் பிரதான சாலையும் சந்திக்கும் நான்கு ரோடு சந்திப்பும் உள்ளது. இங்கு வேகத்தடை இல்லாததால் விபத்துக்கள் நடக்கின்றன. வேகத்தடை அமைக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலனில்லை.

 எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்தும் பணியை நடத்தும் இந்த வேளையில், ருகத்தூரான்பட்டியில் விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர் ஜோசப் ஜான்இன்னாசி கூறுகையில், ‘மதுரை வாடிப்பட்டியிலிருந்து பள்ளப்பட்டி சிலுக்குவார்பட்டி வழியாக நிலக்கோட்டை வத்தலக்குண்டு செல்லும் நெடுஞ்சாலையில் பள்ளபட்டியை அடுத்துள்ள முருகத்துரான்பட்டியில் சுமார் 800 குடும்பங்கள் உள்ளன. மற்றும் 100 ஆண்டு பழைமையான தேவாலயம், அரசு ஆரம்ப பள்ளி கூட்டுறவு அங்காடி முதலாகவை உள்ளன.

இந்த இடத்தில் காலை முதல் மாலைவரை பள்ளி குழந்தைகள் பணியாளர்கள் பூ வியாபாரிகள் வாகன ஒட்டிகள் பொதுமக்கள் என சாலையைக் கடக்கும் போது சாலையில் வரும் அசுர வேக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு இந்த இடத்தில் விபத்துக்கள் தொடர்கதையாக உள்ளது கடந்த ஓராண்டில் மட்டும் 10-க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது இதனை தடுக்க தற்போது நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து வசதியை நவீனப்படுத்திவரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முருகத்துரான்பட்டி நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்றார்.

Related Stories: