காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டி கொள்கிறேன்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டி கொள்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சிதலைவர் ஓமர் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மூவர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்த விசாரணையும் இன்றி சிறையிலோ அல்லது வீட்டுக்காவலிலோ வைத்திருக்க முடியும் என கூறினார்.

Advertising
Advertising

இந்நிலையில். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறினார். நாளுக்கு நாள் அங்கு சூழ்நிலை மேம்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அங்கு கைதாகியுள்ள அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள். அனைவரும் இதனை வரவேற்க வேண்டும் என தெரிவித்தார். ஒமர், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலை பெறவும் காஷ்மீர் மேம்பாட்டிற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என நான் வேண்டி கொள்கிறேன் என கூறினார்.

Related Stories: