குஜராத்தில் நடந்தது நினைவில் இருக்கட்டும்: பாஜ எம்எல்சி மிரட்டல் பேச்சு

நாக்பூர்: `குஜராத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இருக்கட்டும்’ என்று வாரிஸ் பதானை பாஜ எம்எல்சி கிரிஸ் வியாஸ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கலபுர்கியில் கடந்த 16ம் தேதி நடந்த தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் வாரிஸ் பதான் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், `முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். நாம் 15 கோடியாக இருக்கலாம். ஆனால்,100 கோடி மீது நடத்தும் தாக்குதல் நடத்தும் பலம் நமக்கு இருக்கிறது,’ என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா வில் டிவி சேனலுக்கு பாஜ எம்எல்சி கிரிஷ் வியாஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் இளைஞர்களும், பாஜ தொண்டர்களும் வாரிஸ் பதானுக்கு அவர் பேசிய அதே மொழியில் பதிலடி கொடுப்பார்கள். நாங்கள் பொறுமையுடன் இருக்கிறோம் என்றால், உங்களுடன் மோத முடியாது என அர்த்தமில்லை. குஜராத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இருக்கட்டும். அதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், இன்று பொங்கி எழுவதற்கு தைரியம் இருக்காது. உங்களுடன் மோத தயாராகவே இருக்கிறோம்.

நாங்கள் என்ன வளையல் அணிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தீர்களா?. சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் பதான் போன்றவர்களை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: