கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 3,004 பேர் பதிவு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 7ம் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து திருவிழாவில்  பங்கேற்க 510 பெண்கள், 102 குழந்தைகள் உட்பட 3,004 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இவர்களது சுய விபரங்கள் குறித்து  வருவாய், காவல்துறை மற்றும் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி இம்மாத  இறுதியில் அனுமதி வழங்கப்படும். மார்ச் 6ம் தேதி காலை 6 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து  77 விசைப்படகுகள், 25  நாட்டுப்படகுகளில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.திருவிழா ஒருங்கிணைப்பாளர் வேர்கோடு பாதிரியார் தேவசகாயம் கூறுகையில், ‘‘ கச்சத்தீவு செல்ல பதிவு செய்துள்ளவர்கள் ஆதார் அடையாள அட்டை மற்றும் காவல்துறையினரின் தடையில்லா சான்று அவசியம் எடுத்து வரவேண்டும்’’  என்றார்.

Related Stories: