தென்னையில் சுருள் பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?... வேளாண் அதிகாரிகள் விளக்கம்

மேலூர்: தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்டாரத்தில் சின்ன கொட்டாம்பட்டி, குமுட்ராம்பட்டி ஆகிய கிராமங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈடு தாக்குதல் காணப்படுகிறது. இந்த பூச்சியானது 2016ல் பொள்ளாச்சி பகுதியில் தென்பட்டது. வீரிய ஒட்டு ரகம் மற்றும் 4 முதல் 8 வயதுள்ள மரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

Advertising
Advertising

இவை அதிகளவு சாற்றினை உறிஞ்சுவதால் இலைகள் வாட துவங்கி பின்னர் மகசூல் குறைந்து விடும். இவற்றை கட்டுப்படுத்த ரசாய மருந்துகளை கண்டிப்பாக தெளிக்க கூடாது. தண்ணீரை இலையின் அடியில் பீச்சி அடிப்பதால் சுருள் பூச்சியை கட்டுப்படுத்தலாம். மேலும் இது குறித்து விபரம் அறிய கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை உதவி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் மதுரைசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: