கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய அந்த 3 பேட்ஸ்மேன்கள் யார்?.. பாகிஸ்தான் மாஜி கேப்டன் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றினை இன்சாம் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். அதன் விபரம் வருமாறு: கிரிக்கெட் விளையாட்டை மாற்றி, ஆக்கிரமிப்பு, கற்பனை மற்றும் புதுமையான பேட்டிங் மூலம் ஒரு புதிய பாணியை உலகிற்கு அறிமுகம் செய்தவர்களாக நான் 3 பேரை தேர்வு செய்கிறேன். அதில் முதல் கிரிக்கெட் வீரர் மேற்கிந்திய ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ். இவர் வேகப்பந்து வீச்சாளர்களை தாக்க முடியும் என்று அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார்.

ஆட்டத்தை மாற்றிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் முன்னாள் இலங்கை ஆல்ரவுண்டர் சனத் ஜெய்சூர்யா. 1996ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 15 ஓவர்களில் ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலம் பந்துவீச்சு தாக்குதல்களை ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஜெய்சூர்யா வெளிப்படுத்தினார். மூன்றாவதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ். இவர், இன்று நாம்காணும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வேகமான கிரிக்கெட்டுக்கு டிவில்லியர்சுதான் காரணம். அனைவரும் சரியான பேட்ஸ்மேன்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: