தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை தமிழகத்தில் இல்லை : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை : தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை தமிழகத்தில் இல்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழா சட்டப்பேரவையில் 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தின் போது, மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழக அளவில் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார். அத்துடன் தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை தமிழகத்தில் இல்லை என்று கூறிய அவர். மருத்துவவியல், கல்வெட்டுயியல், தொல்லியல், வானவியியல் என்று 10க்கும் மேற்பட்ட துறைகளை தமிழில் நடத்தி வேலை வாய்ப்புக்கான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டார்.

Related Stories: