சீனாவில் இருந்து வந்த ஓட்டல் உரிமையாளர் கோவிட்-19 காய்ச்சலால் இறக்கவில்லை: சுகாதாரத்துறை தகவல்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சீனாவில் இருந்து திரும்பிய ஓட்டல் உரிமையாளர் கோவிட்-19 தாக்குதலால் உயிரிழக்கவில்லை என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கோதைமங்கலத்தை சேர்ந்தவர் சக்திகுமார்(42). இவர் சீனாவில் ஓட்டல் நடத்தி வந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற்றார். நோய் குணமாவதற்குள் சீனாவில் ஓட்டலில் ஆள் இல்லாததால் அங்கு சென்று ஓட்டலை கவனித்தார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 4ம் தேதி அவர் சொந்த ஊர் திரும்பினார்.

நோயால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி இறந்தார். இந்த நிலையில், கோவிட்-19 காய்ச்சல் தாக்குதலால் சக்திகுமார் உயிரிழந்ததாக சுற்றுவட்டாரங்களில் தகவல் பரவின. ஆனால் இதனை மறுத்துள்ள அவரது உறவினர்கள், மஞ்சள் காமாலை மற்றும் நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலால் சக்திகுமார் இறக்கவில்லை என்று சுகாதாரத்துறையும் கூறியுள்ளது. மேலும், மஞ்சள் காமாலை பாதிப்பு மற்றும் நுரையீரல் கோளாறால் கடந்த 6 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: