திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 250வது படிக்கட்டில் மான் ஒன்றை சிறுத்தை தாக்கி சாப்பிட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
