புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் வறட்சியால் அழிவை நோக்கி செல்லும் நாட்டுமீன் இனங்கள்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் வறட்சி காரணமாக நாட்டுமீன் இனங்கள் அழிவைநோக்கிசெல்கிறது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருஉயினத்தின் பெருக்கம், பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் நீர் இன்றியமையாதது. எனவே தான் மனிதனின் நாகரீகம் கூட ஆற்றங்கரையில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் நீரின்றி வறட்சி ஏற்படுமாயின் அப்பகுதியில் உள்ள மொத்த உயிரினத்தின் வாழ்க்கையும்,வாழ்க்கை முறைகளும் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இதற்கு சுற்றுச்சூழல் காரணம் என கருதப்பட்டாலும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும், பாதிப்பு ஏற்படுத்துவதிலும் மனிதனின் பங்கு முக்கியமானது.

இப்படியாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் மழையின்றி கடும் வறட்சி சந்தித்து வருவதை காணமுடிகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கால்நடைகள்,விலங்குகள் குடிநீரின்றிஅலைவது ஒருபுறம் உள்ளது. மனிதர்களும் குடிநீர் தட்டுப்பாட்டால் வீதி வீதியாக அலைவதை பார்க்க முடிகிறது. இந்த இயற்கையின் விளையாட்டில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு பல கண்ணுக்கு புலப்படாத உயினங்கள் அழிந்த நிலையில் முக்கியமான நாட்டு மீன் இனங்கள் அழிந்து வருவது புதுக்கோட்டை மாவட்ட பகுதி இயற்கை ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவகாலத்தில் தவறாது பெய்த மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும். இதனால் நாட்டுமீன் இனங்களாகிய அயிரை, கெழுத்தி, உழுவை, குறவை, விரால், சிலேபி, ஆரா, விலாங்குமீன் உள்ளிட்டவைகள் பெருக்கம் அதிகமாக காணப்படும்.

இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் தொடர்வறட்சியால் அனைத்து மீன் இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதில் ஆரா,உழுவை, விலாங்குமீன் இனம் முற்றிலும் அழிந்தது குறிப்பிடதக்கது. எனவேஅதிகாரிகள் இயற்கை சமநிலைப்படுத்தும் இது போன்ற சிறியவகை உயிரினங்கள் அழிவை தடுத்து பெருக்கமடைய தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுபற்றிஅரிமளம் பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது மீன் இனம் அழிந்ததற்கு வறட்சி ஒரு காரணமாக இருந்தாலும் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள் மீன்கள் உள்ள கண்மாய்,குளங்களில் கலக்கும் நிலையில் அதில் வளரும் மீன்கள் அழிவதோடு,மீனின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு தற்போதுஅரிமளம் பகுதியில் நாட்டுமீன் இனமே இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

மீன் முட்டைகள் அழிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் உள்ள ஒரு சில நீர்நிலைகளிலும் அதிகலாபம் பெருவதற்காக வளர்ப்புமீன்கள் விடப்படுகிறது. இந்த மீன்கள் நாட்டுமீன்களை உண்டு வாழ்வதோடு மட்டுமின்றி நாட்டு மீன்களின் முட்டைகளைஅழித்து விட்டதாகவிவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்வறட்சியால் நீர்நிலைகள் முற்றிறும் காய்ந்து விடுவதால் மீன் முட்டைகள் வெப்பம் தாங்க முடியாமல் அழிந்து விட்டது.

10 வருடங்களுக்கு முன்னர்ஒரு கிராமத்தில் உள்ள நீர்நிலை முற்றிலும் வறண்டாலும் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் நீர் இருக்கும். இதனால் பருவ காலங்களில் மழை பெய்து வௌ்ளப்பெருக்கு ஏற்படும் போது ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு நீர் செல்லும். அப்போது மீன் உள்ள குளத்தில் இருந்து நீரும்,மீனும் அடுத்தடுத்த குளத்திற்கு பகிரப்படும். ஆனால் மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சியால் தற்போது நீர் பகிர்வதற்கு வாய்ப்பில்லாமல் அனைத்து நீர்நிலைகளும் காய்வதால் மீன் இனங்கள் அழிவை சந்தித்து வருகிறது.

மீன் தானேஎனஅலட்சியம் வேண்டாம்: தற்போது மனித இனம் பூமியில் வாழ்வதற்கு இயற்கைக்கு எதிரான பல செயல்களை செய்து வருகிறது. ஒரு உயிருள்ள செல்லை வைத்து புதிய உயினத்தை தற்போதுள்ள அறிவியல் உருவாக்க முடியும். அப்படி உருவான உயிரியால் வலிமையான அடுத்த தலைமுறையை கண்டிப்பாக உருவாக்க முடியாது. உதாரணமாக அறிவியல் வளர்ச்சியில் புதியநெல் ரகங்கள் கண்டுபிடித்துவிவசாயிகள் விவசாயம் செய்யும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் விதைகளை மலட்டு விதைகளாக பார்க்கின்றனர்.

எனவேதான் அறுவடைக்கு பின்னர் மீண்டும் விவசாயம் செய்ய புதியநெல் விதைகள் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே இயற்கையின் அழிவின் தொடக்கமே நாட்டுமீன்களின் அழிவுமீன்களின் அழிவுமனிதனுக்கும், இயற்கைக்கும் ஆபத்தைஉண்டாக்கும் எனவே நாட்டு மீன் இனங்கள் பெருக்கத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். நாட்டுமீன்களைமீட்பதுஎப்படி: மீன்கள் வளருவதற்குநீர்முக்கியமானதாகஉள்ளது. எனவேஅரசு திருமயம்,அரிமளம் பகுதியில் உள்ள நீர்நிலைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவகாலத்தில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஆண்டுதோறும் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதன் பின்னர் தமிழகத்தில் வறட்சியில்லா மாவட்டங்களில் உள்ளநீர்நிலைகளில் இருந்த நாட்டு மீன்களை சேகரித்து திருமயம்,அரிமளம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ப்பதன் மூலம் நாட்டுமீன் இனத்தின் அழிவை தடுக்கலாம். சிறிதுநேரத்தில் விற்றுதீர்ந்தகண்மாய்மீன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் கடல்,வளர்ப்புமீன்களேஅதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கண்மாய் மீன் வாங்கி சாப்பிட தற்போது மக்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஓரளவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. இதனை பயன்படுத்தி கொண்ட ஒரு சில கிராம மக்கள் கண்மாய் நீரில் மீன் வளர்ப்பு செய்தனர். தற்போதுகடும் வெயில் காரணமாக கண்மாய் நீர்குறைந்து வருவதால் வளர்க்கப்பட்ட மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே திருமயம் அருகே உள்ள கடம்பட்டி கண்மாயில் நேற்றுமீன் பிடிக்கப்பட்டு விற்பைனைக்கு கரைக்கு வருவதற்கு முன்னரே மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீனை வாங்கி சென்றனர். அதே சமயம் வளர்ப்புமீன்ளான ரோகு, கட்லா, கண்ணாடி கெண்டை உள்ளிட்ட வளர்ப்பு மீன்களே அதிகம் இருந்தநிலையில் நாட்டுமீன்கள் இல்லாதது அப்பகுதிமக்களைஏமாற்றமடையச் செய்தது.

Related Stories: