வரவேற்பு இல்லை; செலவும் அதிகம் மலிவு ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்த திட்டம்

புதுடெல்லி: 5,000க்கு கீழ் உள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் உற்பத்தியை கைவிட பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.சாதாரண போன் வைத்திருப்பவர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற ஈர்க்கும் வகையில் மலிவுவிலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றின் தொடக்க விலை 5,000க்கும் கீழ்தான் இருக்கும். முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்குவோர் பெரும்பாலும் இந்த மலிவு போன்களைத்தான் வாங்க துவங்கினர்.ஆனால், 4ஜி இலவச சேவை அறிமுகமான பிறகு, உயர்ரக ஸ்மார்ட்போன்களை நோக்கி மக்கள் நகர தொடங்கி விட்டனர். இதனால், மலிவு விலை போன்களின் தேவை குறைந்து விட்டது. இதுகுறித்து மொபைல் உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது;கடந்த 2018ல், 5,000க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் விற்பனை 25 சதவீதம் சரிந்து விட்டது. கடந்த ஆண்டில் இந்த சரிவு 45 சதவீதம் ஆகிவிட்டது. இந்த ஆண்டில் மேலும் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

அதாவது, ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மலிவு போன்கள் பங்களிப்பு கடந்த ஆண்டில் 4 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டில் 2 சதவீதமாக சரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 2018ல் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை சுமார் 11,290 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் இது 11,360 ஆகவும், இந்த ஆண்டில் 12,070 ஆகவும் உயர்ந்து வருகிறது. அதோடு, மலிவு ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி செலவு அதிகம். விற்பனை சரிந்ததால் நஷ்டம் அதிகமாகிறது. சில மொபைல் சேவை நிறுவனங்கள் 2,500 விலையிலேயே, அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவையுடன் குறைந்த பேக்கேஜில் ஸ்மார்ட்போன்களை களம் இறக்குகின்றன. எனவே, இத்தகைய நிறுவன தேவைக்காக அல்லாமல், சந்தையில் களம் இறக்க இனி 5,000க்கு கீழ் ஸ்மார்ட்போன் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: