புதிய அகழ்வைப்பகம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் மூலம் சங்ககால மக்கள் வாழ்ந்த நகர நாகரீகத்தை தமிழர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. அதாவது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் ஏன் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்களும் பண்டைய தமிழர் தம் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொண்டு பெருமை அடைவார்கள். இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கையின் உரையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.

இந்நிலையில் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் வரும் 19ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. எனவே கீழடியில் தொல்பொருள் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்காகவும், அகழ்வைப்பகம் அமைப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதற்கான பணியை காலத்தே தொடங்கி, காலக்கெடுவிற்குள் முடித்து, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

Related Stories: