கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி

வள்ளியூர்: கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட  இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 12ம் தேதி, முதல் அணு உலையில் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி தடைபட்டது. இதனால் சுமார் 900 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பழுதை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர். நேற்று மாலை 3.15 மணியளவில் பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. முதல் அணு உலையில் இருந்து இரவு 9 மணி வரை சுமார் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: