தொடர்ந்து 6வது மாதமாக ஏற்றுமதி கடும் சரிவு

புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 6வது மாதமாக கடந்த ஜனவரியிலும் சரிவை சந்தித்துள்ளது.  ஜனவரியில் ஏற்றுமதி, இறக்குமதி விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 1.66 சதவீதம் சரிந்து, 2,567 கோடி டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது தொடர்ந்து 6வது மாதமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.  இதுபோல், இறக்குமதியும் குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் இறக்குமதி 4,114 கோடி டாலராக உள்ளது. இது 0.75 சதவீதம் சரிவாகும். இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,505 கோடி டாலராக உள்ளது.   நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஏற்றுமதி 1.93 சதவீதம் சரிந்து 26,526 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 8.12 சதவீதம் சரிந்து 39,853 கோடி டாலராக உள்ளது. வர்த்தக பற்றாக்குறை 13,327 கோடி டாலராக உள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: