18 பொதுத்துறை வங்கிகளில் 1.17 லட்சம் கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நிதி மோசடிகள் தொடர்பாக சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் தகவல் கோரியிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் 3 காலாண்டுகளில் 8,926 வங்கி நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1,17,463.73 கோடி மோசடி நடந்துள்ளது. இதனால் 18 பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கியில் 30,300 கோடி (4,769 வழக்குகள்) மோசடி நடந்துள்ளது.

Advertising
Advertising

இதுபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,928.62 கோடி (294 வழக்கு), பாங்க் ஆப் பரோடா 11,166.19 கோடி, அலகாபாத் வங்கியில் 6,781.57 கோடி, பாங்க் ஆப் இந்தியாவில் 6,626.12 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா 5,604.55 கோடி, ஐஓபி ₹5,556.64 கோடி, ஓரியண்டல் காமர்ஸ் 4,899.27 கோடி மற்றும் கனரா வங்கி, யூகோ வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட வங்கிளில் 1,867 வழக்குகளில் 31,600.76 கோடி மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: