ரூ.4000 கோடி முதலீட்டில் உருவான சியட் டயர் தொழிற்சாலையை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!! : 1,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

காஞ்சிபுரம்: 4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.  புதிய தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் தமிழக அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு, முதல்வர், துணை முதல்வரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் முதலீடுகளை திரட்டி வருகிறது.

இந்த வகையில் தமிழக அரசின் தொழில் துறைக்கும் பிரபல சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 0 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பேச்சு

இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், இந்தியாவில் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழகத்தில்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.மேலும் வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என்று குறிப்பிட்ட முதல்வர், இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது என்று பெருமைப்பட தெரிவித்தார். அன்மையில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர தொடங்கி வைத்த நிலையில், தற்போது சியட் தொழிற்சாலையையும் தொடங்கி வைத்தார்.

Related Stories: