காங்கிரஸ் அறிவித்த ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் பிரதமர் மோடி, சிறந்த வில்லன் அமித்ஷா...கடும் கோபத்தில் பாஜகவினர்

டெல்லி: சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. ஹாலிவுட் கலைஞர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  இதையடுத்து கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும், ஜூடி படத்தில் நடித்த ரெனே  ஸெல்விகர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதும்  வென்றனர். சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த  இயக்குனர் என தென்கொரிய படம் பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. இது 92வது ஆஸ்கர் விருதுகள் விழா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சிறந்த நடிகருக்கான  ஆஸ்கர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது என்று விமர்சனம் செய்துள்ளது.

சிறந்த நகைச்சுவை விருது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் பெயர்களை பரிந்துரை செய்து டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி  சிறந்த நகைச்சுவைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது பாஜக பெண் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பெயர்களை பரிந்துரை செய்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பிரதமர் நரேந்திர  மோடிக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிறந்த வில்லன் விருது மத்திய உள்துரை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் சிங் தாகூர் பெயர்களை பரிந்துரை செய்து சிறந்த வில்லனுக்கான ஆஸ்கர் விருது மத்திய  உள்துரை அமைச்சர் அமித்ஷாவிற்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த விருது குறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: