சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:கடலூர் மாவட்டத்தில் ஹால்டியா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்தால் ₹50 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும். சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நன்மைகளை விட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் வேதி ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நிலத்தில் கலந்ததால் நிலத்தடி நீரில் டயாக்சின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.