மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: தெலங்கானா கவர்னர் பங்கேற்பு

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு விழா நேற்று  முன்தினம் அதிகாலை மங்கள இசையுடன் துவங்கியது. காலை 9 மணிக்கு சித்தர்பீடம்  வந்த ஆன்மிககுரு பங்காரு  அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கலசவிளக்கு, வேள்வி பூஜையை துவக்கிவைத்தார். காலை 8 மணிக்கு அன்னதானத்தை  ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ்  துவக்கி வைத்தார்.   

 

மாலை 4 மணிக்கு டிரம்ஸ் கலைஞர் சிவமணி குழுவினரின் இன்னிசை நடந்தது. மாலை 4.30 மணியளவில் தைப்பூச ஜோதி ஏற்றும் விழா துவங்கியது.  குரு ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைத்தார்.  மாலை 5 மணிக்கு குரு  ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் துவங்கி வைத்தனர்.விழாவில் பங்கேற்ற தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை  அளிக்கப்பட்டது.  முன்னதாக, சித்தர்பீடம் வந்த கவர்னர், ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிப்பட்டார்.  இதையடுத்து, தைப்பூச ஜோதியை கவர்னர் ஏற்றிவைத்தார்.

இதில், ஆதிபராசக்தி பள்ளி மாணவ, மாணவிகளின்  கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், கவரினரின் கணவர் சவுந்தரராஜன், தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநர் ராதா கிருஷ்ணன், ஓய்வுபெற்ற  நீதிபதி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஜோதி பிரசாத விநியோகத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ்  துவக்கி வைத்தார். இதற்காக, சித்தர் பீடம் சிறப்பாக  அலங்கரிக்கப்பட்டிருந்தது. 50 நாட்களுக்கும் மேலாக நடந்த நிகழ்ச்சியில்  50 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமம், இயக்கத்தின் ஈரோடு மாவட்ட மன்றம்,  சக்திபீடம் ஆகியவை செய்திருந்தன.

Related Stories: