கர்தார்பூருக்கு வரும் இந்தியர்களை விசா இன்றி அனுமதிக்க பாக். பரிசீலனை

இஸ்லாமாபாத்: சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தனது இறுதி காலத்தை தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட்ட கர்தார்பூரில் கழித்ததாக கூறப்படுகிறது. அவரது நினைவாக கர்தார்பூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வாரா நிறுவப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கிலிருந்து 4 கி.மீ, தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடம் கடந்த ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டது.

இவ்வழியாக இந்திய பக்தர்களை விசா இன்றி அனுமதிப்பது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் இஜாஜ் ஷா, ‘‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கையெழுத்தான கர்தார்பூர் ஒப்பந்தத்தில் விசா இன்றி அனுமதிப்பது குறித்து எந்த அம்சமும் இல்லை. ஆனாலும், இந்தியர்களுக்கு விசா இன்றி அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது,’’ என்றார்.

Related Stories: