பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை எதிர்க்கட்சிகள் என்ற முறையில் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம் : ப.சிதம்பரம் விளக்கம்

புதுடெல்லி:  டெல்லியில் உள்ள வணிகவியல் கல்லூரி ஒன்றில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய அரசின் அலட்சியம் காரணமாக மீண்டும் பொருளாதார வளர்ச்சியற்ற ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் அல்லது போர் ஏற்பட்டாலோ நம்மிடையே பொருளாதார மாற்றுத் திட்டம் இருப்பது அவசியம். அவ்வாறு மாற்று திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசு சாதாரணமான பொருளாதார வளர்ச்சி இலக்காக 10 சதவீதத்தை கொண்டுள்ளது. ஆனால், உண்மையான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவே இருக்கும்.  

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைத்ததற்கு பதில் ஜிஎஸ்டி வரியை குறைத்து மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரித்திருக்கலாம். மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் அதிக தொகையை ஒதுக்கியிருக்கலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு தவற விட்டுள்ளது. பொறுப்பான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசின் பொரு ளாதார வீழ்ச்சிக் கான காரணங் களை மத்திய அரசுக்கு நாங் கள் சுட்டிக் காட்டி வருகிறோம். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு மோடியின் கொள்கைகளே காரணம் என அடிக்கடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டிவருகிறார். தவறான முறையில் பிரதமர் மோடியால் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே பொருளாதார சரிவுக்கு காரணம் என குற்றம்சாட்டி வரும் ராகுல்காந்தி நேற்று டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் பிரதமராகிய நீங்கள் உங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டை எப்படி தவிர்ப்பது என்பது பற்றியே சிந்தித்து வருகிறீர்கள். இதற்காக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பயனற்ற பட்ஜெட்டை பயன்படுத்துகிறீர்கள். நிர்மலா சீதாராமனை பதவி நீக்கிவிட்டு அவர் மீது பழி சுமத்தினால் பிரச்னை தீர்ந்துவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: