மாநிலங்களவையில் துணை சபாநாயகர் இன்றி நடத்தப்பட்ட 62 அமர்வுகள்

புதுடெல்லி: மக்களவையில் நீண்ட நாட்களாக துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை என்பது தொடர்பாக குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ பிரைன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அவர் கூறியிருப்பதாவது: மக்களவை துணை சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசமானது 22 அமர்வுகளாக இருந்தது. 12வது  மக்களவையில் தான் 59 நாட்கள் என அதிக காலஅவகாசம் எடுக்கப்பட்டது. ஆனால் மோ-ஷா (மோடி மன்னர்) நம்பமுடியாத சாதனையை புரிந்துள்ளனர். 62 அமர்வுகள் முடிந்த பின்னரும் இன்னும் மக்களவை துணை சபாநாயகர்  நியமிக்கப்படவில்ைல.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 93வது பிரிவு முதல் 97வது பிரிவு வரை மக்களவை உறுப்பினர்களில் இருந்து ஒரு சபாநாயகர், ஒரு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு பதவி காலியாகும்பட்சத்தில் உறுப்பினர்கள் மற்றொருவரை தேர்வு செய்ய வேண்டும். விரைவில் துணை சபாநாயகர் தேர்வு   செய்யப்படவேண்டும். இவ்வாறு வீடியோவில் கூறியுள்ளார்.

Related Stories: