பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முஷ்ராப் தூக்கு ரத்தைஎதிர்த்து வக்கீல் வழக்கு

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப். இவர் அதிபராக இருந்தபோது, 2007ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக அவசர நிலை பிரகடனம் செய்தார். இதுதொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு அதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து முஷாரப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்தது. தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டாபிக் ஆசிப் என்ற வக்கீல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: