சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் இலங்கையில் தமிழுக்கான கவுரவம் குறைப்பு: சிங்களத்தில் தேசியகீதம் பாடப்படும்

கொழும்பு; இலங்கையில் இன்று நடைபெறும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பு சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இரு மொழிகளில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்பட்டது. இடையில் தமிழில் பாடுவது நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.  `நமோ நமோ மாதா’ என்ற சிங்கள மொழி பாடல் இந்த நாட்டின் தேசிய கீதமாக பாடப்பட்டு வருகிறது. இதை `லங்கா தாயே’ என தொடங்கும் வகையில் தமிழில் தேசிய கீதமாக மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது. இலங்கையில், கடந்த நவம்பரில் அதிபராக  பொறுப்பேற்ற கோத்தபய புத்தமதத்தை பின்பற்றும் சிங்களர்களின் பெரும்பான்மை  ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அப்போது அனைத்து இனத்தவரையும்  பாதுகாப்போம் என தெரிவித்த அவர் புத்தமதத்தை பின்பற்றுபவர்களுக்கு தனது  அரசு அதிக முக்கியத்துவம் தரும் என தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று விமரிசையாக ெகாண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழில் தேசிய கீதத்தை பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இலங்கை தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: