கொரோனா பரவல் எதிரொலி: வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்ததை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் திருப்பணிகள் முடிந்து ஏப்ரல் 29ம் தேதி மகாகும்பாபிஷேசம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கொரோனா கட்டுப்பாடு  விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மேற்பார்வை குழு அமைக்கவும், கொரோனா விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா விதிகள் பின்பற்றப்படும் என்றும் கோயில் ஊழியர்களை வைத்தே குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது. …

The post கொரோனா பரவல் எதிரொலி: வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: