பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது திமுக உட்கட்சி தேர்தல் : பொதுக்குழு கூட்டப்பட்டு பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்

சென்னை : திமுகவில் உட்கட்சித்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது திமுகவின் 15வது பொதுத் தேர்தல் ஆகும். கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். 1949ம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக, திமுகவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 பொதுத் தேர்தல்களை நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கழக சட்டத்திட்டங்களின்படி, பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.முதற் கட்டமாக திமுக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பேரூர்க் கழகம் மற்றும் மாநகர வட்டக்கழகத் தேர்தல்கள், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய - நகர - மாநகரப்

பகுதிக் கழகத் தேர்தல்களும், இவை முடிந்த பின்னர், மாநகரக் கழகத் தேர்தல்களும் நடைபெறும். இவற்றைத் தொடர்ந்து, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக்கழகப் பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் கழகத் தணிக்கைக்குழுஉறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று திமுகத் தலைமைக் கழகம் கூறியுள்ளது. 

Related Stories: