பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு பாஜவில் இணைந்தார்

சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிரபல திரைப்பட இயக்குனரும், இயக்குனர் சங்க பொருளாளருமானபேரரசு நேற்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கி, பிரதமர் நரேந்திர மோடியின் உன்னத திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்புற பணியாற்றிட வேண்டும் என்று வாழ்த்தினார்.கட்சியில் இணைந்த பேரரசு கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தேச பணியால்  ஈர்க்கப்பட்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக” தெரிவித்தார்.

Related Stories: