விபத்தில் மூளைச் சாவு அடைந்த 8ம் வகுப்பு மாணவன் உடல் உறுப்புகள் தானம்

வேலூர்: வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயன் சின்னப்பா, டிரைவர். இவரது மகன் ஜீவன்ராஜ்(13), 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 28ம் தேதி வீட்டின் அருகே உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த  அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து மாணவனின் பெற்றோர் ஒப்புதலுடன் மாணவனின் இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி  சென்னை க்கும் மற்றொரு கிட்னி, கண்கள் வேலூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: