வாஷிங்டன்: சூரியன் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டும் மிகவும் துல்லியமான புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. ஹவாயில் உள்ள டேனியல் கே இனோய் சோலார் தொலைநோக்கி, சூரியனை முழுவதும் 30 கிலோ மீட்டர் பரப்பில் சிறிய அம்சங்களை காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாயில் நிறுவப்பட்டுள்ள டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொதிநிலையில் உள்ள பாத்திரத்தில் வறுபடும் பாப்கார்ன் போல சூரியனின் மேற்பரப்பு காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, சுமார் 1.4 மில்லியன் கிலோ மீட்டர் விட்டம் மற்றும் பூமியிலிருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நட்சத்திரமான சூரியனின் படங்களை படம் பிடித்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.