8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு: குழந்தைகளுக்கு மிகப்பெரும் மனஅழுத்தம் தருவதாக கல்வியாளர்கள் குற்றசாட்டு

சென்னை:  5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதே ஒரு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய சூழலில்  தற்போது கூடுதலாக தினமும்  8ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு மற்றும் தேர்வுகள் நடத்தப்படவேண்டுமென்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இச்சுற்றறிக்கை மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது அறிவியல் பூர்வமான முறையல்ல, ஏனெனில், அது மாணவர்களின் மனரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தேர்வு பயத்தை, இந்த குறைந்த வயதிலேயே அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடியது என அவர்கள் சாடினார். மாணவர்களிடம்  தேர்வு குறித்த அச்சம் இருப்பதால்தான் மோடி அவர்களே, பொது தேர்வு குறித்து நேரடியாக கலந்துரையாடுகிறார். அரசாங்கமே இச்சுழலை உணர்ந்திருக்கிறது.

ஆதலால் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு என்கிற முறையை கைவிடவேண்டும். இது மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்கும் சூழல் உருவாகிவிடும் என்பதை வலியுறுத்தி, தற்போது கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 8ம் வகுப்புக்கு மட்டும் சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பித்து, தற்போது அவை நடைமுறையில் செயல்படுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் சிறப்பு வகுப்பு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் பள்ளி வேலை நேரம் முடிந்து 5.30 மணிவரை சிறப்பு வகுப்பு நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இவை மாணவர்களின் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இதுபோன்ற ஈவு இரக்கமற்ற செயலை தமிழக அரசு உருவாகியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சிறந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வியாளர்களின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்திய  தேசத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த செயலால் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். 

Related Stories: