ஒலிம்பிக்கில் வெல்லும் உ.பி. வீரர்களுக்கு ரூ.6 கோடி பரிசு: முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு

லக்னோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலையில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. ஜூலை 24ம் தேதி தொடங்கும் இப்போட்டி, ஆகஸ்ட் 9ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்தியாவின் சார்பில் இம்முறை பலம் வாய்ந்த அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக வீரர்கள், வீராங்கனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் உத்தரப் பிரதேச மாநில வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இதேபோல் வெள்ளிப்  பதக்கத்துக்கு ரூ.4 கோடியும், வெண்கல பதக்கத்துக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதுதவிர தங்கள் மாநிலத்தில் இருந்து பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Related Stories: