சென்னை: திருக்குறள் ஓவிய காட்சி கூடத்தின் சார்பில் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 2019-20ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையில், “உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவிய காட்சி கூடத்தின் வழி ஆண்டுதோறும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டியில் திருக்குறள் நெறிப்படி சிறந்த ஓவியம் படைப்பவருக்கு பரிசு வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை. தொலைபேசி 044-22542992, iitstaramani@gmail.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
