சேவாக் முடியை விட அதிகம்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அடிக்கடி கடந்த கால உண்மைகளை போட்டு உடைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் அவர் ‘கனேரியா இந்து என்பதால் சக பாக்.வீரர்கள் அவரை புறக்கணித்தனர்’ என்றார். இந்நிலையில்  ‘சோயிப் அக்தர் பணத்துக்காக இந்தியாவை புகழ்கிறார்’ என்று  வீரேந்திர சேவாக் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. அதற்கு இவ்வளவு நாட்களாக பதிலளிக்காத அக்தர் இப்போது, ‘நான் சாதாரணமானவன். சாதாரணமாகதான் பேசுகிறேன். ஒருவருக்கு செல்வம் அல்லாவால்தான் கிடைக்கிறது. இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடிகளின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது. இதை வேடிக்கையாகதான் சொல்கிறேன். ஜாலியாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: