தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த குரங்கு, பல்லி உள்ளிட்ட 27 விலங்குகள் பறிமுதல்: பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர் லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் தாய்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்திருந்தார். அதில் வீட்டில் வளர்ப்பதற்கான செல்லப் பிராணிகளான உயர் ரக நாய்குட்டிகளை முறையான அனுமதி பெற்று வாங்கி வந்திருக்கிறேன் என பயணி கூறினார். அதை திறந்த பார்த்தபோது தாய்லாந்து, கம்போடியா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் லாவோஸ் போன்ற அடர்ந்த வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகை விலங்குகளை வைத்திருந்தார். அதில் மர்மோசெட் என்ற குரங்குகள் 2, பல்லிகள் 15, அனில்கள் 5, ஓணான்கள் 5, என மொத்தம் 27 விலங்குகள் இருந்தன.

Advertising
Advertising

இது குறித்து மத்திய வன உயிரின குற்றப் பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பயணி சுரேஷை கைது செய்தனர். விலங்குகளை கைப்பற்றினர். கடத்தல் ஆசாமி சுரேஷை அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து ரகசியமாக வெளியே அழைத்து வந்தனர். அப்போது கடத்தல் ஆசாமி சுரேஷிடம் இருந்து இந்த விலங்குகளை வாங்கிச் செல்ல சென்னையை சேர்ந்த 2 பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்த அதிகாரிகள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவைகளை இந்தியாவில் அனுமதித்தால் இந்தியாவில் வைரஸ் கிருமிகள் பரவி விடும் என தெரியவந்தது. பின்னர் இவைகளை தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Related Stories: