திருச்சி அருகே 2 ஆண்டுகளாக தபால்களை குப்பையில் வீசிய போஸ்ட்மேன் டிஸ்மிஸ்

மணப்பாறை: திருச்சி அருகே 2 ஆண்டுகளாக தபால்களை உரியவர்களிடம் சேர்க்காமல் குப்பையில் வீசிய போஸ்ட்மேனை பணிநீக்கம் செய்து தபால்துறை அதிகாரி உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் முன்புறம் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் 2018 முதல் 2019 வரை உள்ள தபால்கள் அனைத்தும் பொங்கலுக்கு முதல்நாள் மொத்தமாக கிடந்தது. அதில் அரசு வேலைக்கான தபால்கள், எல்.ஐ.சி கடிதங்கள் உள்ளிட்டவை இருந்தன. மணப்பாறை போலீசார் பார்த்த போது, அந்த தபால்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த ஒளியமங்கலம் அஞ்சல் நிலையத்தை சேர்ந்தது என தெரிய வந்தது. இதனையடுத்து தபால்கள் அனைத்தும் சேகரித்து சீலிட்ட கவரில் வைத்து தாசில்தார் தமிழ்கனியிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், மணப்பாறை பகுதியில் இந்த தபால்களை வீசிச்சென்றது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தபால் துறை அதிகாரிகள் தனியாக நடத்திய விசாரணையில், ஒலியமங்களம் அஞ்சல் நிலையத்தின் போஸ்ட்மேன் சீனிவாசன் (45) கடந்த 2 ஆண்டுகளாக தபால்களை விநியோகம் செய்யாமல் குப்பையில் வீசிசென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணப்பாறை உட்கோட்ட அஞ்சல் துறை ஆய்வாளர் கணேசன், போஸ்ட்மேன் சீனிவாசனை டிஸ்மிஸ் செய்து  உத்தரவிட்டார்.

Related Stories: