ஸ்ரீநகர்: காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் கடும் பனிப் பொழிவால், உறைய வைக்கும் அளவுக்கு கடுங்குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஸ்ரீநகரில் குறைந்தபட்சமாக நேற்று முன்தினம் மைனஸ் 0.8 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை நேற்று -1.4 ஆக குறைந்தது.