கீழக்கரை கடல் நடுவில் நீண்ட‌ பால மணல் திட்டு

கீழக்கரை.: கீழக்கரையில் கடல் நடுவில் இயற்கையாக நீண்ட பாலம் போன்று மணல் திட்டு அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இந்த பகுதி கடற்கரை அருகே கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர்  தொலைவுக்கு இயற்கையாக அமைந்த கடல் பாலம் போல நீண்ட மணல் திட்டு உள்ளது. கீழக்கரை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் இந்த  பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருப்பதால் இப்பாலத்தின் மேல் நின்று மீன் பிடிக்கின்றனர்.  மேலும், பாறைகள் மேல் உள்ள பாசிகளை உண்ண  மீன்கள் அதிக அளவில் வருகின்றன. இப்பாறைகளை கரை பகுதியிலிருந்து காண முடிவதால் ஏராளமானோர் இப்பகுதிக்கு வந்து ஆச்சரியமாக  பார்வையிட்டு செல்கின்றனர். கடல்நீர் மட்டம் அதிகமாகும்போது பாறைகள் தெரியாதபடி கடல் நீர் நிரம்பி காணப்படும்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘கடலில் நீர் குறைவாக இருக்கும்போது இந்த பாறையில் நின்று மீன் பிடிக்கலாம். சில நேரங்களில் நீரின் அளவு அதிகமாகும் நேரத்தில் பாறைகள் நீரில் மூழ்கி இருக்கும். அதிக பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் நன்றாக  கடல் தன்மை பற்றி அறிந்தவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் இங்கு மீன் பிடிப்பது நலன் பயக்கும். நீச்சல் தெரியாதவர்கள் இப்பகுதிக்கு  வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: