பேரறிவாளன் வழக்கில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பேரறிவாளன் வழக்கில் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டு பற்றி புதிதாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெல்ட் வெடிகுண்டு பற்றி சிபிஐ சிறப்புக்குழு அளித்த விசாரணை அறிக்கை திருப்தியில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இடம்பெறவில்லை என நீதிபதிகள் கோபமடைந்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த நவம்பர் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறியதாவது:

எனது மகன் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் இத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். இந்த அரசு எனது மகன் விடுதலைக்கு விரைந்து முடிவெடுக்கும் என கோரிக்கை வைக்கிறேன். எனது மகனுடன் கொஞ்ச நாளாவது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வேறு எதுவும் கேட்கவில்லை. எனது மகன் அநியாயமாக இந்த தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகனுடைய விடுதலையை விரைவில் எதிர்பார்க்கிறோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: