தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தஞ்சை வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் புலவர்நத்தம் அருகே வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் கீர்த்திகா, நிர்வாக அலுவலர் செந்தில் குமார், கல்லூரியின் டீன் ஜெகதீசன், வாண்டையார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. விவேகானந்தர் இளைஞர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அவர்கள் இந்த சமூகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களுக்கு கருத்தரங்கம், பேச்சுப்போட்டி மற்றும் குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இயந்தரவியல் துறை ஆசிரியர் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி நிறுவனர் குணசேகர வாண்டையார், தாளாளர் விஜயபிரகாஷ் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவபாலன் செய்திருந்தார். மேலும் கல்லூரியின் மாணவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்தக் கொணட்டு போட்டியில் பங்கெற்றனர்.

விவேகானந்தரின் விருப்பம்:

இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது, அவர்களது வயது எத்தகைய சவால்களையும் தூக்கி எறிந்து, சாதிக்க கூடியது என்கிறார் சுவாமி விவேகானந்தர். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்றும் தான் இவர்களுக்கான தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இரும்பு போன்ற தசை, எக்கு போன்ற நரம்பு இளைஞர்களுக்கு வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும் என்று விவேகானந்தர் கூறினார். மேலும் நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன் என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

Related Stories: