சென்னை: தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 160 ஆக அதிகரித்தது. திருமணம் மற்றும் விசேஷ நாட்கள் வர உள்ள நிலையில் தங்கம் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ஆக அதிகரித்தது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் கடுமையாக உயர்ந்து வந்தது. சில நேரங்களில் குறைவதுமாகவும் காணப்பட்டது. அதாவது, கடந்த 2ம் தேதி ஒரு சவரன் தங்கம் 29,888, 3ம் தேதி 30,520, 4ம் தேதி 30,656, 6ம் தேதி 31,168, 7ம் தேதி ₹30,904 என்றும் விற்கப்பட்டது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராம் 3,897க்கும், சவரன் 31,176க்கு விற்கப்பட்டது.