மத்தியபிரதேசத்தில் புதிய சேவை: உறவினர்கள் இல்லாத 75 வயதுடையவர்களுக்கு வீட்டிற்கே ரேஷன் பொருட்கள்...மாநில உணவுத்துறை அமைச்சர் தகவல்

போபால்: மத்தியபிரதேசத்தில் உறவினர்கள் இல்லாத 75 வயதுடைய முதியவர்களுக்கு வீட்டிற்கே ரேஷன் மளிகை பொருட்கள் கொண்டுவந்து கொடுக்கப்படும் என மாநில உணவு மற்றும் உணவுப் பொருள்  வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், உதவி இல்லாமல் தனியாக வசிக்கும் 75 வயதுடையவர்களுக்கும் வீட்டிற்கே ரேஷன் மளிகை பொருட்கள்  கொண்டுவந்து  கொடுக்கப்படும் என்றும் அதே நேரத்தில் உறவினர்கள் இருந்தால், அவர்களில் ஒருவரை ரேஷன் பொருட்களை வாங்க அவர்கள் நியமித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மாநிலத்தில் 83 லட்சம் பேர் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். போலி அட்டைதாரர்களை கண்டுபிடிக்க ரேஷன் மித்ரா என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இதுவரை 1  கோடியே 18 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களில் 37 சதவீதம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன” என்றும் அவர் கூறினார்.

ஒரு தேசம், ஒரு ரேஷன் கார்டு திட்டம்:

ரேஷன்  கார்டு வைத்துள்ள குடும்பத்தினர் நாட்டில் எந்த மாநிலத்திலும் நியாயவிலை கடைகளில் உணவு தானியம் பெற்றுக் கொள்ள வசதியாக ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டத்தை மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தை முதல் கட்டமாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா,  தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா,  ஜார்க்கண்ட், அரியானா, திரிபுரா  மாநிலங்களில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்துவதாக அறிவித்தது.

இதன்படி, கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் இத்திட்டம் செயல்பட தொடங்கியது. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளிலும்  பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை பதிவு  செய்வது உணவு தானியம் பெற்று வருகிறார்கள். அதேபோல், கர்நாடகாவில் வசிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பொருட்கள் வாங்குகின்றனர். அதன்  தொடக்கமாக, தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மக்களை கேரள  மாநிலம், காசர்கோடுவுக்கு அழைத்து சென்று அதிகாரிகள் உணவு தானியம் வாங்க வைத்தனர். அதேபோல், கர்நாடகா எல்லையோரங்களில்   வசிக்கும் 23 சதவீத கார்டுதாரர்கள், தெலங்கானா, ஆந்திரா,  கேரளா மாநிலங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் உணவு தானியம் பெற்றுள்ளனர்.

Related Stories: