குளிர்பதன அறையில் பொருளாதார திட்டம்: பிரியங்கா கடும் விமர்சனம்

புதுடெல்லி: மார்ச் மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் காணப்படும் மோசமான நிலை, பொருளாதார சரிவுக்கு மிக முக்கிய காரணமாகும்.

இது பற்றி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட  டிவிட்டர் பதிவில், ‘பாஜ தலைமையிலான மத்திய அரசானது பொருளாதாரத்தில் அதிக கவனத்தை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், பொருளாதாரத்தை முன்னேற்றும் விவகாரத்தை அரசு குளிர்பதன கிடங்கில் பாதுகாத்து வருகிறது. ஜிடிபி வளர்ச்சி குறைவு குறித்த அறிக்கையானது பொருளாதார சூழல் நன்றாக இல்லை என்பதையே காட்டுகின்றது.  இந்த தாக்கமானது வர்த்தகம், ஏழைகள், தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை தீர்ப்பதற்காக அரசு சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: