சென்னை மாநகராட்சியில் வார்டு பிரித்தலில் நிறைய குழப்பம்: பேரவையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் (திமுக) பேசியதாவது: பேரூராட்சியில் இருக்கிற, நகராட்சியில் இருக்கிற, மாநகராட்சியில் இருக்கிறவர்களுக்கு எந்த ேதர்தல் நடக்க போகிறது. அதில் நமக்கு ஒரு ஓட்டா, இரண்டு ஓட்டா என தெரியாத நிலையில் மக்கள் குழம்பி கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் 7 தடவை சட்ட முன்வடிவை, தனி அலுவலர் பதவி நீட்டிப்பு வந்து கொண்ட இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அதை எதிர்த்து கருத்தை சொல்லி கொண்டே இருக்கிறோம். இதற்கு நீங்கள் சொல்லும் காரணம்  ஏற்றுக்கொள்வதாக இல்லை.

சென்னை மாநகராட்சியில் வார்டு பிரித்தலில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. 137வது வட்டத்தில் 54,801 வாக்காளர்கள் உள்ளனர். 159வது வட்டத்தில் 2921 வாக்காளர்கள் உள்ளனர். இது சரியான, நியாயமான விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?

இன்னொன்று மகளிருக்காக 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறார்கள். அதை திமுக வரவேற்கிறது. ஆனால் ராயபுரத்தில் 48லிருந்து 53 வரையில் 6 வார்டுகள். 6 வார்டுகளுமே பெண்களுக்குரியது. அதில் ஒன்று கூட ஆண்களுக்கே இல்லை, என அறிவிப்பு வந்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி: தொடர்ந்து 6 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாக சொல்கிறார். நீங்கள்தான் சரியான முறையிலே வார்டுகள் பிரிக்க வேண்டும். சரியான முறையிலேயே இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள். அதைதான் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: