முன்னாள் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன் மீது வழக்குப்பதிவு: கைது செய்ய போலீஸ் தீவிரம்

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தை சேர்ந்தவர் நிரஞ்சனி (40). இவர், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கத்தில் உள்ள அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பில் கடந்த 2016ல் சேர்ந்தேன். இயக்க தலைவர் ஸ்ரீகண்டன்  என்ற கோடம்பாக்கம் ஸ்ரீக்கு மொழி பிரச்னை இருப்பதால் டெல்லிக்கு அவருடன் தனியாக சென்று வந்தேன். தொடர்ந்து, எனக்கு 2019 மகாசபா அமைப்பின் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர்பதவி கொடுத்தார்பிறகு என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார்.  கடந்த செப்டம்பர் மாதம் என் கையை பிடித்து கட்டியணைத்து, தகாத செயலில் ஈடுபட முயன்றார்.

நான் தப்பி வந்துவிட்டேன். அவரது செயலால் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். நான் அமைப்பில் சேரவில்லை என்றால் எனது ஆபாச கதைகளை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். எனவே ஸ்ரீகண்டன் மீது நடவடிக்கை எடுஅளிக்க வேண்டும். புகாரின்படி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்டன் மீது ஐபிசி294 (பி), 354(ஏ),506(1) மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு பிரிவு என 5 பிரிவுகீழ் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்:

ஆயிரம்விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கோடம்பாக்கம்(எ) கண்டனின் மனைவி நான்சி  நேற்று புகார் ஒன்று அளித்தார்.அதில், நிரஞ்சனி தனது தம்பி திருமணத்திற்காக எனது கணவர். சென்னை -பெங்களூரு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் 20 லட்சம் செலவு செய்து  திருமணம் செய்து வைத்தார். கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு வாங்கி தருவதாக 5 லட்சம் பணத்தை ஜெயக்குமார் என்பவரிடம் வாங்கி கொடுத்தார். ஆனால் போலீஸ் பாதுகாப்பு வாங்கி கொடுக்கவில்லை. அடியாட்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வருகிறார். எனது கணவரிடம் இருந்து பறித்த 20 லட்சத்தை திரும்ப கேட்டதால் பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: