முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு போலீசுடன் கவுதமன் கடும் வாக்குவாதம்

சென்னை: தமிழ்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் இயக்குநர் கவுதமன் நேற்று காலை 11.15 மணியளவில் தலைமை செயலகம் வந்தார். அவரிடம் உதவி ஆணையர் உக்கிரபாண்டி, ‘முதல்வரை சந்திக்க அனுமதி வாங்கியுள்ளீர்களா?’ என்று கேட்டார். அதற்கு கவுதமன் அனுமதி வாங்கவில்லை. முதல்வரிடம் தெரிவியுங்கள். அனுமதி கொடுப்பார்’’ என்று கூறினார். அப்போது உதவி ஆணையர், ‘சட்டபேரவை நடக்கிறது. முதல்வரை சந்திப்பது கடினம். தனிப்பிரிவில் மனு கொடுங்கள்’ என தெரிவித்தார். ஆனால் கவுதமன், முதல்வரின் செயலாளரிடம் மனுவை கொடுத்து விட்டு செல்வதாக கூறினார். அப்போது அங்கு வந்த துணை ஆணையர் ராஜேந்திரன், ‘முதல்வரின் செயலாளர் சட்ட பேரவையில் இருப்பதால் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துவிட்டு செல்லுங்கள்’ என கூறினார்.  அதற்கு கவுதமன், ‘‘புகார் அளித்தால் முதல்வரிடம் மனு சென்றுவிடும் என்று உத்தரவாதம் தரமுடியுமா?’ என்று கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.  தொடர்ந்து கவுதமன் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு சென்றார்.

Related Stories: